நடிக்க வரும் பார்வதி ஓமணக்குட்டன்!

இவர் ஏற்கெனவே மிஸ் இந்தியா உள்ளிட்ட பல உள்ளூர் பட்டங்களை வெனறுள்ளார். கடந்த முறை தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக அழகிப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்றார். அப்போதே திரைப்படங்களில் நடிக்கவும் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவர் 'யுனைட்டர் -6' எனும் இந்திப் படத்தில் விஷால் ஆர்யன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 5-ந் தேதி பாங்காங்கில் தொடங்குகிறது. இந்தப் படத்தை முடித்த பிறகு தொடர்ந்து தென்னிந்தியப் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார் பார்வதி ஓமணக் குட்டன்.
நடிககைகள் பஞ்சத்தைத் தீர்க்க வரும் ஓமணாவை வரவேற் கோலிவுட்டும் தயாராகிவிட்டது. கால்ஷீட் கேட்டு இப்போது இரு இயக்குநர்கள் மும்பைக்குப் பறந்துவிட்டார்களாம். அதில் ஒருவர் இயக்குநர் பேரரசு!
Comments


Click it and Unblock the Notifications