ராக்கியின் 'தாராளம்'

ராக்கி சாவந்த்தை சாதாரண கோலத்தில் யாருமே பார்க்க முடியாது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கவர்ச்சி தோரணமாக வந்துதான் நிற்பார்.
சமீபத்தில், மும்பையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றுக்கு வந்தார் ராக்கி. படு வெளிப்படையான டிரஸ்ஸுடன் வந்த ராக்கியைப் பார்த்து ஹோட்டல் ஊழியர்களுக்கு என்னவோ போலாகி விட்டது.
கெளபாய் பாணி பேன்ட், டைட்டான சட்டை போட்டு வந்த ராக்கியைப் பார்த்து ஹோட்டல் ரெஸ்டாரென்ட்டில் இருந்தவர்கள் அனைவரும் ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.
அப்போது ஒரு வெயிட்டர், ராக்கியை தனது செல்போனால் படம் பிடிக்க முயன்றார். அதைப் பார்த்த ராக்கி, அவரிடம் நெருங்கி, என்னை மட்டும் ஏன் பிடிக்கிறீர்கள், என்னுடன் சேர்ந்து படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூற வெயிட்டர் மெல்ட் ஆகிப் போனார்.
அது போதாதா, அங்கிருந்த அத்தனை வெயிட்டர்களும், கஸ்டமர்களை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று கூறி விட்டு வேகம் வேகமாக ராக்கியை அணுகி நாங்களும் படம் பிடித்துக் கொள்கிறோம் என்று கூறி புகைப்படம் எடுக்க முண்டியடித்தனர்.
ராக்கியும் சற்றும் சளைக்காமல் ரசிகர்கள் விருப்பத்திற்கேற்ப போஸ் கொடுத்து கலக்கலாக புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.
வெயிட்டர்களின் கையைப் பிடித்தபடி, தோளில் கை போட்டபடி, கட்டி அணைத்தபடி விதம் விதமாக போஸ் கொடுத்து ஏரியாவையே ஹீட் ஆக்கி விட்டார் ராக்கி.
எல்லாம் முடிந்து ராக்கி அங்கிருந்து போன பிறகும் கூட வெயிட்டர்கள் நார்மல்ஸிக்குத் திரும்ப ரொம்ப நேரம் ஆனதாம்.


Click it and Unblock the Notifications











