கண்தானம் செய்து பெயரைக் காப்பாற்றிக் கொண்ட ரம்யா!

By Staff

Divya Spandana
இயக்குநர்களுடன் மோதல், டான்ஸ் மாஸ்டருடன் தகராறு, பத்திரிகையாளர்களை ஏக வசனத்தில் திட்டுவது என மோசமான காரணங்களுக்காக தொடர்ந்து முதல் பக்கத்தில் இடம் பெற்று வந்த ரம்யா என்கிற திவ்யா ஸ்பாந்தனா (அதாங்க குத்து ரம்யா!) முதல்முறையான நல்ல காரணத்துக்காக முக்கியச் செய்தியாகியுள்ளார்.

தனது 27 வது பிறந்த நாளையொட்டி, நேற்று அவர் தனது கண்களை தானம் செய்வதாக எழுத்துப்பூர்வமாகக் கொடுத்துள்ளாராம்.

இந்த கண்தானம் செய்யும் நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தார் ரம்யா. இதில் நாராயண நேத்ராலயா டாக்டர் புஜங்க ஷெட்டி கலந்து கொண்டார். கண்தானம் செய்யும் உறுதிமொழி பத்திரத்தில் நடிகை ரம்யா கையெழுத்து போட்டு வழங்கினார். அவரை நாராயண நேத்ராலயா டாக்டர்கள் குழுவினர் பாராட்டினர்.

விழாவில் நடிகை ரம்யா பேசியதாவது:

"பார்வையற்றவர்களுக்கு பார்வைஒளி கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் கண்தானம் செய்கிறேன். கூடவே எனது ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதேபோல எனது ரசிகர்களும் என்னை காண விரும்பினர்.

இதனால் எனது ரசிகர்களை அழைத்து நான் பிறந்த நாள் கொண்டாடுகிறேன். கடந்த ஒரு ஆண்டாகவே எனது படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்ரகள். விரைவில் ரசிகர்களுக்கு விருந்தாக சிறந்த படத்தை கொடுப்பேன். அடுத்த மாதம் நான் நடித்த கன்னடப்படம் ஜொதேகாரா வெளியாகிறது. அது ரசிகர்களைக் கவரும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X