கிளாமருக்கு ரம்யா 'நோ'

குத்து படத்திற்குப் பிறகு ரம்யாவுக்கு தமிழில் கிராக்கி ஏற்பட்டது. இறுப்பினும் குண்டக்க மண்டக்க அவர் போட்ட கண்டிஷன்களால் கடுப்பான தயாரிப்பாளர்கள், ரம்யாவை ஏறக்கட்டி விட்டனர்.
இந்த நிலையி்ல் பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழுக்குத் திரும்பியுள்ள ரம்யா, திவ்யா என்ற இயற்பெயருடன் பொல்லாதவனில் தனுஷுடன் சேர்ந்து நடித்தார்.
இப்படம் வெற்றிப் படமானதால் மறுபடியும் முறுங்கை மரத்தில் ஏறி விட்டாராம். தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் நிறைய கண்டிஷன்களைப் போடுகிறாராம்.
அதில் முக்கியமானது, தன்னுடன் நடிக்கும் ஹீரோ கண்டிப்பாக அழகாக இருக்க வேண்டுமாம். அத்தோடு பாப்புலர் பார்ட்டியாகவும் இருக்க வேண்டுமாம்.
மேலும் கிளாமருக்கும் டாடா காட்டப் போகிறாராம் திவ்யா. கெளதம் மேனன் இயக்கத்தி்ல நடித்து வரும் வாரணம் ஆயிரம் வந்த பின்னர் தனது ரேஞ்சே மாறிப் போகும் என்றும் கூறும் ரம்யா, அதன் பிறகு மேலும் பல கண்டிஷன்களைப் போட்டாலும் போடுவாராம்.
ஒரு படம் ஜெயிச்சாச்சுல்ல, அப்ப பேச வேண்டியதுதான்.


Click it and Unblock the Notifications











