மறுபடியும் சமிக்ஷா

By Staff

Samiksha
தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போய் விட்ட சமிக்ஷா மறுபடியும் திரும்பி வந்துள்ளார். இரட்டை நாயகிகளில் ஒருவராக கார்த்திகை என்ற படத்தில் நடிக்கிறார்.

அறிந்தும் அறியாமலும் படம் மூலம் தமிழுக்கு வந்தவர் சமிக்ஷா. அதன் பின்னர் ஓரிரு படங்களில் நடித்தார். கவர்ச்சி காட்ட சற்றும் தயங்காதவராக இருந்தும் கூட அவரது மார்க்கெட் சூடு பிடிக்கவில்லை.

சமீப காலமாக கையில் ஒரு படமும் இல்லாமல் ஓரம் கட்டப்பட்டு விட்டார் சமிக்ஷா. இடையில், இந்தி தொலைக்காட்சித் தொடரில் நடிக்கப் போயிருந்தார்.

இந்த நிலையில் சமிக்ஷாவுக்கும் ஒரு படம் கிடைத்துள்ளது. அப்பா, மகள், அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படம்தான் கார்த்தீகை. இதில், நாயகனாக விசில் பட நாயகன் விக்கிரமாதித்யா (இவரும் காணாமல் போய் திரும்பியவர்தான்) ஹீரோவாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக சமிக்ஷா நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக மாளவிகா நடிக்கிறார்.

சமீபத்தில் இவர்கள் மூன்று பேரும் பங்கேற்ற 3 அட்டகாசமான பாடல்களை பாங்காக்கில் வைத்து ஷூட் செய்துள்ளனர்.

இந்தப் படத்திலும் கவர்ச்சியில் கலகலப்பாக விளையாடியுள்ளாராம் சமிக்ஷா. இப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் காலூண்றுவதே சமிக்ஷாவின் இப்போதைய லட்சியமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X