மலையாளத்தில் 'மாயாவான' ஷீலா!

ஆனால் ஷீலாவாக அல்ல... மாயா எனும் புதிய பெயரில்.
மலையாளத்தில் ஏற்கெனவே ஷீலா எனும் பெயரில் ஒரு மெகா நடிகை இருப்பதால் எதற்கு வம்பு என புதுப்பெயர் சூட்டிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார் ஷீலா.
தாய் மொழி தெலுங்கு என்றாலும் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான தமிழ்ப் டங்களில் நடித்தவர் ஷீலா.
குமரி்யானதும், இளவட்டம், கண்ணா, வேதா எனப் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் மீடியம் பட்ஜெட் இயக்குநர்களின் ஆஸ்தான நாயகி ஷீலாதான்.
சரி... மாயா எனப் பெயர் சூட்டிக்கொண்டது என்ன படத்துக்காகத் தெரியுமா... மம்மூட்டி நாயகனாக நடிக்கும் பிரமாண்டத் தயாரிப்பான மாயாபஜாருக்காகத்தான்.
Comments


Click it and Unblock the Notifications