சரத் மகளாக ஷ்ரியா

1977 படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமாருடன் கரம் கோர்க்கிறார் சரத். இருவரும் இணைந்த படங்கள் சூப்பர் ஹிட் என்பதால் இப்படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தப் படத்தின் பெயர் ஜக்குபாய். இது ரஜினிகாந்த் நடிக்கவிருந்து கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்ட படம் என்பது நினைவிருக்கலாம். இந்தக் கதையை தற்போது சரத்குமாரை வைத்து இயக்கவுள்ளார் ரவிக்குமார்.
இப்படத்தை சரத்குமாரின் மனைவி ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ஷ்ரியாவும் ஒரு நாயகி. இப்படத்தில் சரத்குமாருக்கு இரட்டை வேடம். அப்பா, மகனாக நடிக்கிறார். இதில் மகன் சரத்குமாரின் ஜோடியகாத்தான் ஷ்ரியா நடிக்கவுள்ளார்.
அப்பா சரத்குமாரின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாயிருந்தவர் சினேகா. ஆனால் இப்போது சினேகா படத்தில் இல்லையாம். தனது ரோல் பிடிக்கவில்லை என்று கூறி விலகிக் கொண்டு விட்டாராம் சினேகா.
ஆனால் ஷ்ரியா படத்தில் ஒப்பந்தமானதால்தான் சினேகா விலகிக் கொண்டு விட்டதாக தெரிகிறது. காரணம், ஷ்ரியாவுக்கு அம்மா வேடத்தில் நடிக்க சினேகா விரும்பவில்லையாம்.
இந்தப் படத்திற்கு கொடுத்த கால்ஷீட்களை தற்போது விக்ரமுடன் நடிக்கவுள்ள படத்துக்கு மாற்றிக் கொடுத்துள்ளாராம் சினேகா.
இதற்கிடையே, ஷ்ரியாவையே அம்மா ரோலையும் செய்யுமாறு கேட்டுள்ளனர். ஆனால் அம்மா ரோல் செய்ய மாட்டேன். மகளில் ரோலில் மட்டுமே நடிப்பேன் என்று கூறி விட்டாராம் ஷ்ரியா.
இதனால் ஜோடியற்றுப் போய் விட்ட அப்பா சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்க இளம், நடிகையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.
1977 படத்தை சரத்குமார் முடித்து விட்டு வந்த பின்னர் ஜக்குபாய் தொடங்கும்.


Click it and Unblock the Notifications











