'இடை'.. தவிக்கும் சிம்ரன்!

ஒரு காலத்தில் தனது இடுப்பசைவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருந்தவர் சிம்ரன். கவர்ச்சி காட்ட மட்டுமல்ல நன்றாக நடிக்கவும் தெரியும் என பின்னர் நிரூபித்தவர்.
அத்தனை முன்னணி இளம் நடிகர்களுடனும், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட மூத்த நடிகர்களுடனும் இணைந்து அசத்தியவர். பின்னர் தடாலடியாக கல்யாணம் செய்து, குழந்தை பெற்றுக் கொண்டு செட்டிலான சிம்ரன், மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பி வந்தார்.
ஆனால் அவர் எதிர்பார்த்தது போல நாயகி வேடம் கிடைக்கவில்லை. இதனால் டிவி பக்கம் திரும்பினார். நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பது என்ற பிடிவாதத்தில் இருந்தவருக்கு கிடைத்தது என்னவோ அக்கா, அண்ணி வேடங்கள்தான்.
இதனால் தனது கொள்கையை தளர்த்திக் கொண்டு அந்த வேடங்களுக்கும் தயாரானார். இப்போது ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து வரும் சிம்ரன், அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அக்கா, அண்ணி வேடங்களில், தனக்கும் முக்கியத்துவம் இருப்பது போன்ற வேடங்களில் நடிக்க தீர்மானித்திருக்கிறார்.
அதேசமயம், தனது உடல் எடையை தொடர்ந்து குறைத்து சிக் என்ற பொலிவைப் பெறும் முயற்சியிலும் அவர் தீவிரமாக இருக்கிறார். ஸ்லிம் கிடைத்தாலும் அந்த சிக் இடை மட்டும் வரவே இல்லையாம். இதுதான் சிம்ரனுக்குப் பெரும் வருத்தமாக இருக்கிறதாம்.
அடப் பாவமே!


Click it and Unblock the Notifications











