நவ்தீப்-சிந்து 'லிப்லாக்'

தெலுங்கில் கெளதம் எஸ்.எஸ்.எல்.சி என்ற பெயரில் வெளியான படம்தான் திரு. கெளதம் எஸ்.எஸ்.எல்.சி என்ற பெயரில் டப் ஆகிறது.
தமிழில் முற்றிலும் வாய்ப்பிழந்து போன நவ்தீப்தான் இப்படத்தின் நாயகன். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சிந்து துலானி. கிட்டத்தட்ட சிந்துவுக்கும் தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லை.
ஆனால் இருவரும் தமிழில் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இப்படத்தை தமிழுக்கு கொண்டு வருகிறார்கள், சிறிய பெயர் மாற்றத்துடன்.
அருண்பிரசாத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கிளுகிளு காட்சிகளுக்குப் பஞ்சமில்லையாம். குறிப்பாக சிந்து துலானியும், நவ்தீப்பும் சம்பந்தப்பட்ட லிப் லாக் காட்சி கோடை காலத்திற்கேற்ற ஜில் ஐஸ் ஆக இருக்கும் என்கிறார்கள்.
தமிழ் கைவிட்டபோதிலும் தெலுங்கில் நவ்தீப்புக்கு நல்ல வாய்ப்புகள் வருகிறதாம். இதனால் தட்டி முட்டி தடுமாறி அங்கே நிலையான இடத்ைதப் பெற முயன்று வருகிறார். அவரது முழுத் திறமையையும் இப்படத்தில் காட்டிக் கலக்கியுள்ளாராம். கூடவே கிளாமருக்கு சிந்து துலானியும் இருந்ததால் படம் அங்கு வெற்றி.
கெளதம் தமிழிலும் பாஸ் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











