மலையாளத்திற்கு போகும் சோனா

தமிழில் சின்னச் சின்ன கேரக்டர்களில் தலை காட்டி வந்த சோனா, பத்து பத்து படம் மூலம் தன நாயகியாக அவதாரம் எடுத்தார். அதில் அவர் காட்டிய கிளாமருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன் படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து அவர் காட்டிய கவர்ச்சிக்கு ஓஹோவென கிடைத்தது வரவேற்பு.
சாமி இயக்கிய மிருகம் படத்திலும் கவர்ச்சிகரமான ரோலில்தான் நடித்தார் சோனா.இப்படி இயற்கையாகவே கவர்ச்சிகமரான கேரக்டர்களில்நடித்ததால் சோனாவைத் தேடி குத்துப்பாட்டுக்களும், கவர்ச்சி பாத்திரங்களுமே வந்து குவிகின்றன.
ஆனால் இப்படியே போனால், நிலைமை க்நதலாகி விடும் என்பதால்,தனது பார்வையை மலையாளத்தின் பக்கம் திருப்பி விட்டு்ள்ளார் சோனா.
அங்கு டி.கே.விஜயன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சோனா. தபு நடித்த சாந்தினி பார் படத்தின் ரீமேக்தான் இது.
இது வெற்றி பெற்றால் கொஞ்ச காலத்திற்கு மலையாளத்திலேயே ரவுண்டு வரலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் சோனா.


Click it and Unblock the Notifications











