'காதல் இளவரசி' கார்த்திகா!

பாண்டியராஜன் மகன் ப்ருத்வியும், கார்த்திகாவும் இணைந்து நடிக்கும் படம்தான் வைதேகி. இருவருமே இதுவரை சினிமாவில் பிரேக் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக கார்த்திகாவுக்கு இந்தப் படம் ரொம்ப முக்கியமானது. காரணம், படத்தின் கதை அப்படி. அவருடைய கேரக்டர் சிறப்பாக வந்துள்ளதாம். இதனால் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறாராம் கார்த்திகா.
இப்படி ஒரு காதலி நமக்கு கிடைக்க மாட்டாரா என்று எல்லோரும் ஏங்கும்படியான கேரக்டராம் கார்த்திகாவுக்கு. இந்தப் படம் மட்டும் வரட்டும், கார்த்திகாவுக்கு காதல் இளவரசி என்ற பெயரே கிடைக்கும் பாருங்கள் என்கிறார் ஜெமினி ராகவா.
இளசுகளைக் குறி வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் விரசம் இல்லாத காதலை அழகாக சொல்லியிருக்கிறார்களாம்.
இயக்குநர்களே பாடல்களை எழுதுவது இப்போது பேஷன் என்பதால் ஜெமினி ராகவாவும் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறாராம்.
சீக்கிரம் வரட்டும் வைதேகி..


Click it and Unblock the Notifications











