அடக்கடவுளே.. 30 வயது இளம் நடிகை கார் விபத்தில் பலி.. சிசிடிவி காட்சியை பார்த்த ரசிகர்கள் வேதனை
மும்பை: மாடல் மற்றும் நடிகை ஹர்ஷில் காலியா ஜெய்ப்பூரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த கோர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஹர்ஷிலின் மரணத்திற்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல்கள் குவிந்து வருகின்றன.
30 வயதான ஹர்ஷில், "கிரைம் நெக்ஸ்ட் டோர்" இணையத் தொடர் மற்றும் பல ராஜஸ்தானி இசை வீடியோக்களில் நடித்துப் பிரபலமானவர். கடந்த மார்ச் 23, திங்கள்கிழமை இரவு, அவரது கார் சாலை தடுப்பில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது.

பணி முடிந்து இரவு திரும்பியபோது ஹர்ஷில் கார் கட்டுப்பாட்டை இழந்தது. அவரது வாகனம் தடுப்பில் மோதி இடதுபுறம் கவிழும் திகிலூட்டும் காட்சி சிசிடிவி பதிவுகளில் உள்ளது. இந்த வீடியோக்கள் இணையத்தில் பரவி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
விபத்து நடந்ததும், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அருகிலிருந்தோர் விரைந்து ஹர்ஷிலை காரிலிருந்து வெளியேற்றி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும், மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக அறிவித்தனர்.
தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களே ஹர்ஷிலின் உயிரிழப்புக்குக் காரணம் என தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஹர்ஷில் காலியா, இணையத் தொடர்கள், பிராந்திய இசை வீடியோக்கள் மற்றும் மாடலிங் மூலம் திரைத்துறையில் வளர்ந்து வந்த இளம் நட்சத்திரம். இன்ஸ்டாகிராமில் பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றிருந்த அவரது திடீர் மறைவு, பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விபத்து வீடியோ பரவுவதால், இளம் உயிர் பறிபோனதற்கு பலரும் வருத்தம் தெரிவித்து வேதனை அடைந்து வருகின்றனர். இத்தகைய காட்சிகளைப் பகிரும்போது கவனமாக இருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஹர்ஷிலின் மரணம், இரவு நேர சாலை பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. விசாரணை தொடர்கிறது; கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும்.
30 வயதெல்லாம் சாகுற வயசா என்றும் யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் அவரது தோழி பலியானதை போல இப்போ இன்னொரு இளம் நடிகை உயிரிழந்துள்ளார் என்றும் இரவு நேரங்களில் காரில் வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முக்கியம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











