'டைரடக்கர்' யுக்தா முகி!

By Staff

Yukta Mookhey
முன்னாள் உலக அழகி, நடிகை என்று பல அவதாரம் எடுத்தும் சுஷ்மிதா, ஐஸ்வர்யா, பிரியங்கா சோப்ரா ரேஞ்சுக்கு ஒரு நல்ல நடிகையாக உயர முடியாமல் போன யுக்தா முகி, கட்டக் கடைசியாக டைரக்டர் ஆக முடிவு செய்து விட்டார்.

மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றவரான யுக்தா முகி, தனது முன்னோடிகளான சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா வரிசையில் நடிகையாக மாறினார். பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த அவரை தமிழுக்கும் கூட்டி வந்து அஜீத் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைத்துப் பார்த்தனர்.

ஆனால் நடிகையாக புகழ் பெறத் தவறி விட்டார் முகி. மூக்கும், முழியுமாக இருந்தும் கூட தான் ஏன் வெற்றி பெறவில்லை என்பது யுக்தாவுக்கே இன்னும் புரியாத புதிர்.

இந்த நிலையில், இயக்குநராகப் போகிறாராம் யுக்தா. இதற்காக முதலில் நியூயார்க் சென்று அங்குள்ள திரைப்பட அகாடமியில் சேர்ந்து படிக்கப் போகிறாராம். அதை முடித்து விட்டு இயக்குநர் அவதாரம் பூணுகிறார். இளைஞர்கள், பெண்களை மையப்படுத்தி தனது படங்கள் இருக்கும் என்று கூறும் அவர், குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்கள் எடுப்பதும் தனது லட்சியம் என்கிறார்.

இதுதவிர நடிகைகளுக்கு ஒரு சூப்பர் அட்வைஸையும் வைத்திருக்கிறார் யுக்தா. நல்ல ரோல்களில்தான் நடிக்க வேண்டும். வருகிற ரோல்களையெல்லாம் வாரிப் போட்டுக் கொண்டு தாறுமாறாக நடிக்கக் கூடாது. வீட்டில் உட்கார்ந்து அனைவரும் பார்க்கும்போது முகம் சுளிக்கும் வகையில் நமது நடிப்பும், கேரக்டரும் இருக்கக் கூடாது என்கிறார் யுக்தா.

நடிப்பு சரிப்பட்டு வரவில்ைல என்பதால் சைடில் சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார் மூகி. அது அவருக்கு ஆத்ம திருப்தியைக் கொடுத்துள்ளதாம். சினிமாதான் எல்லாமே என்று கிடையாது. அதையும் தாண்டி பல உலகங்கள் உள்ளன. சமூக சேவையில் எனக்கு அதிக நாட்டம் உள்ளது. அதற்காக உலகம் பூராவும் நான் சுற்றியுள்ளேன் என்கிறார் பெருமிதமாக.

சமூக சேவையின் ஒரு பக்கமாக, எய்ட்ஸ் விழிப்புணர்வு, மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு பிரசாரம், தலசீமியா குறித்த நிகழ்ச்சிகளிலும் அதிக அளவில் முகி பங்கேற்கிறாராம். அது மட்டுமா, தனது உறுப்புகளையும் தானம் செய்து சக நடிகைகளுக்கு நல்ல பாடமாக விளங்குகிறார்.

இது போதாதென்று கடந்த ஐந்து வருடங்களாக யோகாவிலும் தீவிரமாக இறங்கியிருக்கிறார் யுக்தா. ஜிம்முக்குப் போய் கடுமையாக உடற் பயிற்சி செய்வதை விட யோகா நமது உடலையும், மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்கிறார் யுக்தா. எனது இளமைக்கு முக்கிய காரணமே யோகாதான் என்கிறார் பெருமையாக.

மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு பேசிக் கொண்டே போகிறார் யுக்தா. அசத்துங்க முகி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X