சீரியல் நடிகையானார் மதுபாலா-ஜெயா டிவி தொடரில் நடிக்கிறார்

நடிகை ஹேமமாலினியின் உறவினர் மதுபாலா. ரோஜா படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த மதுபாலா பின்னர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். இரண்டு குழந்தைகளும் உள்ளன. அமயா, கேயா என இரண்டு குழந்தைகள். முதல் குழந்தைக்கு 10 வயதும், 2வது குழந்தைக்கு 8 வயதும் ஆகிறதாம்.
இப்போது மீண்டும் நடிக்க வந்து விட்டார் மதுபாலா. இந்த முறை அவர் டிவி பக்கம் வந்துள்ளார்.
குட்டி பத்மினியின் கணவர் பிரபு நேபால் தயாரித்து, இயக்கும் செளந்தரவல்லி என்ற மெகா தொடரில் நாயகியாக வருகிறார் மதுபாலா.
இதில் அவருக்கு தாசி வேடம். அதேசமயம், தாசிகுலத்தின் அவலத்தைத் துடைத்து சமூக நீதிக்காக போராடும் கேரக்டராம் மதுபாலாவுக்கு.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்ததால் முதல் ஷூட்டிங்கின்போது சற்று பதட்டமாக இருந்ததாம் மதுபாலாவுக்கு. முதல் காட்சிக்கு நான்கு டேக்குகள் வாங்கினாராம். அதன் பின்னர் படிப்படியாக இயல்பாகி ஒரே டேக்கில் ஓ.கே செய்ய ஆரம்பித்தாராம்.
இது எனக்கு மறு வருகை. டிவி தொடரில் நடிப்பதற்காக நான் வருத்தப்படவில்லை. இதுவும் நடிப்புதான். நான் டிவியில் நடிப்பதை எனது தோழிகளான ரம்யா கிருஷ்ணன், குஷ்பு ஆகியோர் வரவேற்று உற்சாகப்படுத்தினர் என்றார் மதுபாலா.


Click it and Unblock the Notifications











