இந்த நடிகை அவந்திகாவுக்கு பாகிஸ்தானிலிருந்து கொலை மிரட்டல்

டிவி சீரியல்களில் நடித்தவர் அவந்திகா. தற்போது திரைப்படங்களுக்கு வந்துள்ளார். மஹி மஹி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மஹி மஹி படத்தில் நடிக்கக் கூடாது. மீறி நடித்தால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.
அவந்திகாவின் செல்போனுக்கு ஐந்து முறை மிரட்டல் விடுத்துப் பேசியுள்ளார் அந்த மர்ம நபர். இதையடுத்து போலீஸில் அவந்திகா புகார் கொடுத்துள்ளார்.
தொலைபேசி அழைப்புகள் ஐந்துமே பாகிஸ்தானிலிருந்து வந்திருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்து வருவதாக உதவி போலீஸ் கமிஷனர் திலீப் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
Comments
actress avantika kapoor அவந்திகா கபூர் நடிகை பாகிஸ்தான் பாலிவுட் மிரட்டல் தொலைபேசி bollywood pak threat calls


Click it and Unblock the Notifications