உண்ணாவிரதம்..வர மாட்டேன்: ஷ்ரியா

இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் பங்கேற்பார்கள் என அறிவி்க்கப்பட்டுள்ளது. அதே சமயம், வராதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் ஷூட்டிங்கில் இருப்பதால் தன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாக ஷ்ரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உண்ணாவிரத நாளில் நான் டெல்லியில் ஷூட்டிங்கில் இருப்பேன். என்னால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்றார்.
Comments


Click it and Unblock the Notifications