காதல் 'தோழி'யின் தமிழ் விசிட்!

காதல் படத்தில் சந்தியா நடித்த கேரக்டரில் முதலில் நடிப்பதாக இருந்தவர் சரண்யாதான். ஆனால் சரண்யாவின் மாடர்ன் லுக்கும், உயரமும், பாலாஜி சக்திவேலுக்கு திருப்தி தரவில்லை. இதையடுத்தே சந்தியா அந்த கேரக்டருக்கு செட் ஆனார்.
இருந்தாலும் சரண்யாவை அப்படிேய அனுப்ப விரும்பாமல், சந்தியாவின் தோழி கேரக்டரில் நடிக்க வைத்தார்.
காதல் படத்திற்குப் பின்னர் சரண்யா தெலுங்கில் நாயகியாகி விட்டார். இப்போது தமிழுக்கும் வருகிறார்.
விளையாட்டு என்ற பெயரில் உருவாகும் படத்தில் சரண்யாதான் நாயகி. படத்தின் இயக்குநரான எழில்வேந்தனே நாயகனாகவும் நடிக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த கண்ணன் என்பவர் இப்படத்தை தயாரிக்கிறார்.
இன்டர்போல் தேடும் ஒரு சர்வதேச கேடிக்கும், துணிச்சல் மிக்க இளம் பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல், கல்யாணம் மற்றும் விதியின் விளையாட்டுதான் இந்தப் படத்தின் கதையாம்.
லஜ்ஜாவதியே பாட்டுப் புகழ் பாடகர் ஜெஸ்ஸி கிப்ட் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகிறார்.
பழனிபாரதி, யுவபாரதி, சினேகன், பிரியன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
தோழியாக தமிழுக்கு வந்த சரண்யாவுக்கு விளையாட்டு நாயகியாக ஏற்றம் தருமா?
--


Click it and Unblock the Notifications











