கமலுக்கு நோ சொன்ன காஜோல்!

By Staff

Kajo with Urmila
மர்மயோகியில் தனக்கு ஜோடியாக நடிக்குமாறு கேட்டுக்கொண்ட கமலுக்கு ஆரம்பத்தில் ஒப்புக் கொண்ட காஜோல், இப்போது தனது நிபந்தனைகளை கமல் ஏற்க மறுப்பதாகக் கூறி நடிக்க மறுத்து விட்டார்.

இதுகுறித்து நம்பகமான சில வட்டாரங்கள் இப்படிக் கூறுகின்றன.

இந்தப் படத்தில் நடிக்க மிகப்பெரிய தொகையை காஜோலுக்கு சம்பளமாகத் தருவதாகக் கூறியிருந்தாராம் கமல். காஜோலின் சம்மதம் பெறுவதற்காக, அவரது கணவர் அஜய் தேவ்கனிடமும் பேசியிருந்தாராம் கமல்.

இதைத் தொடர்ந்து, நடிப்பதற்கு முதலில் ஒப்புக் கொண்ட காஜோல் சில நிபந்தனைகளை விதித்ததாகக் கூறப்படுகிறது.

நெருக்கமான காதல் காட்சிகளி்ல் நடிக்க மாட்டேன், முத்தக் காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தால் வரமாட்டேன் என ஏகப்பட்ட கண்டின்கள் போட சற்று யோசனைக்குப் பிறகு ஒப்புக் கொண்டாராம் கமல்.

ஆனால், சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்கள் சிலருக்குப் பேட்டியளித்த கமல், இந்தப் படத்தின் படப்பிடிப்பை சுவிட்சர்லாந்தில் நடத்தப்போவதாகக் கூறியிருந்தார்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தினால் இந்தப் படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்றும், நட்புடன் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ள விரும்புவதாகவும் கூறிவிட்டாராம் காஜோல்.

வேறு வழியின்றி இப்போது நயன்தாராவின் பதிலுக்குக் காத்திருக்கிறார் உலக நாயகன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X