பாடத் துடிக்கும் மீரா

By Staff

Meera Nandhan
வால்மீகு நாயகி மீரா நந்தனுக்கு பாட்டுப் பாடும் ஆசை வந்து விட்டது. இசைஞானியிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறாராம். எனவே அடுத்த படத்திலேயே இசைஞானியின் இசையில் பாட வாய்ப்பு வரும் என்று பெரும் நம்பிக்கையுன் உள்ளார் மீரா.

நாயகர்களும், நாயகிகளும் பாட்டுப் பாடி நடிப்பது அந்தக் காலம். இப்போதெல்லாம் வசனம் பேசுவதற்கே வேறு வாயைத் தேடும் நிலை. காரணம், தமிழ் தெரிந்த நடிகைகள் மிக மிகக் குறைவாக இருப்பதால்.

இந்த நிலையில் சில நடிகைகளுக்கு நல்ல குரல் வளம் இருப்பதால் நடிப்பதோடு பாட்டுப் பாடவும் வாய்ப்பு இருந்தால் அதையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

மலையாளத்து மம்தா மோகன்தாஸ், நடிப்போடு பாடவும் செய்கிறார். தெலுங்கில், தேவிஸ்ரீபிரசாத்தின் இசையி்ல இவரது பாடல் கண்டிப்பாக இடம் பெறும். தமிழிலும் கூட பிரசாத்தின் இசையில், வில்லு படத்தில் ஒரு பாட்டுப் பாடியுள்ளார்.

கிட்டத்தட்ட தொழில்முறைப் பாடகியாகவே மாறி வருகிறார் மம்தா.

இந்த வரிசையில் விரைவில் மீரா நந்தன் இணைவார் போலத் தெரிகிறது. இவரும் மலையாளம்தான். தமிழில் வால்மீகி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

நல்ல குரல் வளத்துடன் காணப்படும் மீரா, பாட ஆசையோடு உள்ளார். அதிலும் இளையராஜா இசையில்தான் தனது முதல் பாடல் அமைய வேண்டும் என்ற ஆசையும் அவரிடம் உள்ளதாம்.

இந்த நிலையில் வால்மீகி படத்தின் இசையமைப்பாளரே ராஜா என்பதால் சந்தோஷமடைந்த அவர் சமயம் பார்த்து இளையராஜாவிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். ராஜாவும் பார்ப்பதாக கூறினாராம். இதனால் படு குஷியாக காணப்படுகிறார் மீரா.

விரைவிலேயே எனக்கு ராஜா சாரிடமிருந்து அழைப்பு வரும் என்று நம்பிக்கையோடு கூறிக் கொண்டிருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X