மீரா ஜாஸ்மின் சிறந்த நடிகை!

திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் முதல்வர் அச்சுதானந்தன் அவருக்கு இந்த விருதினை வழங்கினார்.
ஒரே கடல் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மீராவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில மாதங்களுக்கு முன் கேரள நடிகர் சங்கமான அம்மா, மீராவுக்கு தற்காலிகத் தடை விதித்தது.
ஷூட்டிங்குக்கு தாமதமாக வருவது மற்றும் கொடுத்த கால்ஷீட்படி நடந்து கொள்ளாதது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் மீது கூறியது இந்த அமைப்பு. மேலும் அம்மா எடுத்து வரும் மிகப் பிரமாண்ட படமான ட்வெண்டி ட்வெண்டியில் நடிக்க மீரா மறுத்துவிட்டதும் ஒரு காரணம்.
இந்நிலையில் மீரா சிறந்த நடிகையாக விருது பெறும் இந்நிகழ்ச்சியை அம்மாவில் உறுப்பினராக இருக்கும் அனைவரும் புறக்கணித்து விடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முன்னணி நடிகர்கள் மோகன்லால், ஜெகதி உள்ளிட்ட சிலர் தவிர மற்ற அனைவரும் விழாவுக்கு வந்திருந்தனர்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், விருது வழங்க வேண்டிய முதல்வர் அச்சுதானந்தன் கிட்டத்தட்ட 2 மணிநேரம் தாமதமாக விழாவுக்கு வந்ததுதான்.


Click it and Unblock the Notifications