ஜகா வாங்கிய மோனிகா!

மங்கை டிவி தொடர் மூலம் பிரபலமான இயக்குநர் அரிராஜன் இயக்கும் படம்தான் மன்மதராஜ்ஜியம். சமீபத்தில் இதன் பூஜை நடந்தது.
படத்தின் பெயருக்கேற்ப மன்மத ராணிகள் ஐவர்தான் இதில் நாயகிகளாக நடிக்கின்றனர்.
தேஜாஸ்ரீ, கீர்த்தி சாவ்லா, அக்ஷயா, ராதிகா மல்ஹோத்ரா, மோனிகா ஆகியோர் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென ராதிகாவைத் தூக்கி விட்டு மேகா நாயரைப் புக் செய்தனர்.
இந்த நிலையில் தற்போது மோனிகாவும் படத்திலிருந்து விலகுவதாக கூறி விட்டாராம். உடம்பு சரியில்லை என்று காரணம் கூறியிருக்கிறாராம்.
இதனால் ஐந்தாவது இடத்தைப் பூர்த்தி செய்ய சங்கவி அல்லது நிகிதாவை அரிராஜன் புக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட பூஜையின்போது சங்கவிக்கு தனி மரியாதை தரப்பட்டது. எனவே அனேகமாக சங்கவியே ஐவரில் ஒருவராக இணையலாம் எனத் தெரிகிறது.
Comments


Click it and Unblock the Notifications