கவர்ச்சி வலை-வெளியேற துடிக்கும் மோனிகா

'அழகி' படத்தில் நடித்ததன் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்த இவர், அதற்குப் பின்னும் சில படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் சரியாகப் போகாததால், சில மாதங்களுக்கு முன் பத்திரிகையாளர் ஆதி இயக்கிய 'சிலந்தி' என்ற படத்தில் எக்கச்சக்க கவர்ச்சி காட்டினார்.
படுக்கையறைக் காட்சிகள், நீச்சல் உடை, அருவியில் குளியல் என இவர் போட்ட ஆட்டம் கோலிவுட்டை கதிகலங்க வைத்தது.
மேலும் சூடு கிளப்பும் வகையில், உடன் நடித்த நடிகர் முன்னா இடுப்பில் கிள்ளினார், உதட்டைக் கடித்தார் என்றும் பரபரப்புக் கிளப்பினார்.
இப்போது அதற்காக ரொம்பவே வருத்தப்படுகிறாராம் மோனிகா. டல்லாக இருந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்த எக்கச்சக்கமாய் எக்ஸ்போஸ் செய்ததே, இப்போது எக்குத்தப்பாக ஆகிவிட்டதாம்.
கவர்ச்சி நடிகைதானே என்ற நினைப்பில் வேறு மாதிரி படங்களிலெல்லாம் நடிக்க அழைப்பு வருகிறதாம். இந்த மாதிரி படங்களில் பெரும்பாலானவற்றை நிராகரித்துவிட்டாராம்.
நன்கு அறிமுகமான நண்பர்களேகூட, அந்த மாதிரி ரோல் இருக்கு.. நடிக்க சம்மதமா என்று கேட்கிறார்களாம்.
சிலந்தி இமேஜ் வலையிலிருந்து எப்படியாவது வெளியில் வந்தால் போதும் எனப் புலம்பும் மோனிகா, இப்போது நடித்துக் கொண்டிருக்கும் அஆஇஈ மற்றும் வர்ணம் படங்கள் சீக்கிரம் வெளி வரவேண்டும் என வேண்டிக் கொண்டுள்ளாராம்.
காரணம், இந்தப் படங்களில் அவர் 'குடும்ப குத்துவிளக்காக' வந்து போகிறாராம்!


Click it and Unblock the Notifications











