சுயம்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்க கூப்பிடுகிறார்கள் - சோனா

கோலிவுட்டில் இப்போதைக்கு கை நிறையப் படங்களுடன் படு கவர்ச்சிகரமாக நடித்து வரும் நடிகை சோனா. முன்னணி நடிகர்களின் படங்களில் சோனா நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக வடிவேலு மற்றும் விவேக் ஆகியோரின் மனதில் இடம் பிடித்து விட்டதால் அவர்களின் காமெடி ஜோடியாகவும் மாறிப் போயிருக்கிறார் சோனா.
இந்த நிலையில் சுயம்வரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமே என்று மும்பையைச் சேர்ந்த சில ஏஜென்சிகள் சோனாவை அணுகியுள்ளனவாம். ராக்கியைப் போல நீங்களும் சுயம்வரம் நடத்தி உங்களுக்குரிய மணமகனைத் தேர்ந்தெடுங்களேன் என்றும் அவை ஆசை காட்டி வருகின்றனவாம்.
ஆனால் ஆண்களை நம்ப முடியாதே என்று எதார்த்தமாக பேசுகிறார் சோனா. அதேசமயம், ஆண்கள் இல்லாமல் வாழவும் முடியாது. எனவே சுயம்வரத்தை நான் நிராகரிக்கவும் இல்லை, அதேசமயம் ஒத்துக் கொள்ளவும் இல்லை. யோசித்துச் சொல்கிறேன் என்று கூறி வைத்துள்ளேன் என்கிறார் சோனா.
சோனா சமீபத்தில் ஷில்பா ஷெட்டியை வைத்து அழகு சாதனப் பொருட்களின் ஷாப் ஒன்றை சென்னையில் திறந்தார் என்பது நினைவிருக்கலாம். அடுத்து ஹைதராபாத்தி்ல் ஒரு நகைக் கடையைத் திறக்கப் போகிறாராம். அப்ப அடுத்து ஜவுளிக் கடையா...?


Click it and Unblock the Notifications











