பி கிரேடு படம் வேணாம்! - நமீதா

கடந்த 5 ஆண்டுகளில் செக்ஸ் பாம் என்ற சொல்லுக்கு உருவம் தந்த பெருமை நமீதாவுக்குதான் உண்டு.
தங்கள் படங்களில் நமீதா ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடினால் போதும், வசூல் கொட்டும் என்று நம்பினார்கள் தயாரிப்பாளர்கள். அவரும் வாங்கிய காசுக்கு வஞ்சனையின்றி கவர்ச்சி காட்டி திணறடித்தார்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் நமீதாவின் கவர்ச்சி ரசிகர்களுக்குத் திகட்டிவிட்டதோ என்ற நிலை ஏற்பட்டு விட்டது. கடந்த ஆண்டு அவர் நடித்த மூன்று படங்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.
ஆனால் தெலுங்கில் நமீதா நடித்த பில்லா மற்றும் சிம்மா சக்கைப் போடு போட்டது.
இந்த நிலையில் நமீதா புதிய முடிவு எடுத்துள்ளார்.
இனி வெறும் கவர்ச்சிக் காட்சிகளில் மட்டும் நடிப்பதில்லை என்றும், நடிக்க ஸ்கோப் உள்ள நல்ல வேடங்களை மட்டுமே ஏற்பது என்றும் முடிவு செய்துள்ளார். இப்போது தமிழில் அவர் நடிக்கும் இளைஞனில் அவருக்கு வில்லி வேடம். ஆனால் படத்தில் மற்றவர்களை டாமினேட் செய்யுமளவு முக்கிய வேடமாம். தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் வந்துள்ளனவாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "படங்களைத் தேர்வு செய்வதில் இப்போது மிகக் கவனமாக உள்ளேன். வருகிற வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. தெலுங்கில் இப்போது மிகப் பெரிய வாய்ப்புகள் வருகின்றன. தமிழில் இனி பி கிரேடு படங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்துவிட்டேன். எனது ரசிகர்கள் மிக அன்பானவர்கள். அவர்களுக்கு எனது நல்ல படங்கள்தான் நினைவில் நிற்கும். மோசமான படங்களை என்னைப் போலவே அவர்களும் மறந்துவிடுவார்கள்...," என்றார்.


Click it and Unblock the Notifications











