சிந்துவுக்கு வாத்தியார் பிரகாஷ்!
{image-Sindhu Tolani250_31072008.jpg tamil.filmibeat.com}பந்தயம் படப்பிடிப்பில் எனக்கு நிறையவே கற்றுக் கொடுத்தார் அனுப நடிகரான பிரகாஷ் ராஜ் என்கிறார் நடிகை சிந்து துலானி.
சுள்ளான் படத்தில் அறிமுகமான சிந்து, பெரிய வாய்ப்புகள் கிடைக்குமென்று எதிர்பார்த்தார். ஆனால் அவரது நேரம் ராசியில்லாத நாயகி என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார்.
இப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் பந்தயம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
தனது மறுபிரவேசம் குறித்து பந்தயம் படப்பிடிப்புத் தளத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
மும்பைவாசியான நான் தமிழில் சுள்ளான், மன்மதன், அலையடிக்குது, பசுபதி மே/பா ராசக்காபாளையம், மஜா ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், எனக்கு பெயர் வாங்கி தருகிற மாதிரி எந்த படமும் அமையவில்லை.
பந்தயம் படம் அந்த குறையைத் தீர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தில் நான், பிரகாஷ்ராஜ் தங்கையாக நடித்து இருக்கிறேன்.
நிதின் சத்யா என்னைக் காதலிப்பார். அதிரடி அரசியல்வாதியான பிரகாஷ்ராஜ் எங்கள் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார். இந்த காதல் போராட்டம்தான் கதை.
படப்பிடிப்பின்போது பிரகாஷ்ராஜ் எனக்கு நிறைய டிப்ஸ்' கொடுத்து, உற்சாகப்படுத்தினார். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.
இந்தப் படத்தில் என் நடிப்பைப் பார்த்து விஜய் என்னை பாராட்டியதை மறக்க முடியாது. இந்த படத்தின் பாடல் காட்சிகளில் நான் கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன் என்பது உண்மைதான். அதேசமயம் நிறைய காட்சிகளில் நன்றாக நடித்துமிருக்கிறேன், என்றார் சிந்து துலானி.


Click it and Unblock the Notifications











