ரவி கிருஷ்ணாவுக்கு கமலினி!

பிரேக் கிடைக்காத நடிகர்கள் வரிசையில் ரொம்ப நாளாக இடம் பெற்றுள்ள ரவி கிருஷ்ணாவுக்கு சமீபத்தில் ரிலீஸான நேற்று இன்று நாளை சற்றே நிம்மதியைக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் அடுத்து காதல்னா சும்மா இல்லை என்ற படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரவி கிருஷ்ணா. தெலுங்கில் வெளியான கம்யம் என்ற படத்தின் ரீமேக் இது. இளங்கண்ணன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் மணி சர்மா, வித்யாசாகர், மூர்த்தி ஆகிய மூன்று இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.
இப்படம் குறித்து ரவிகிருஷ்ணா கூறுகையில்,இது வித்தியாசமான படம். தமிழ் சினிமாவில் எனக்கு இது நிரந்தரமான இடத்தைப் பெற்றுத் தரும் என்றார் நம்பிக்கையுடன்.
இப்படத்துக்காக ரவிகிருஷ்ணா பல காட்சிகளில் மெனக்கெட்டு நடித்துள்ளாராம். அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் கமலினி முகர்ஜி. இவரும் தமிழில் இன்னும் பெரிய பிரேக் கிடைக்காமல் இருப்பவர்தான்.
கமலினியுடன் நடிப்பது குறித்து ரவி கிருஷ்ணா கூறுகையில், இது இனிமையான அனுபவமாக உள்ளது என்றார் சிரித்தடி.
கமால்யா!


Click it and Unblock the Notifications











