கடை திறக்கும் சோனா!

மிருகம் படத்தில் படு கவர்ச்சிகரமாக தோன்றி பிரமிக்க வைத்தவர் சோனா. தொடர்ந்து பத்து பத்து படத்தில் நாயகியாகவும், குசேலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக மறுபடியும் படு கவர்ச்சியாகவும் வந்து போனார். சிவப்பதிகாரம் படத்திலும் தலை, உடல் காட்டினார்.
தமிழில் தொடர்ந்து கவர்ச்சி சக்கையாகவே தன்னை அனைவரும் பார்ப்பதால் மலையாளத்திற்கு இடம் பெயர்ந்துள்ளார். ஆனால் அங்கும் கூட கவர்ச்சிகரமாகத்தான் நடித்து வருகிறார் சோனா.
இந்த நிலையில், செயற்கை நகைகள் மற்றும் அணிகலன்கள் விற்பனைக் கூடத்தை திறக்கவுள்ளார் சோனா.
ஜனவரி 9ம் தேதி இந்தக் கடை திறக்கப்படுகிறது. திறந்து வைக்கவிருப்பது பாலிவுட்டின் கனவுக் கன்னி ஷில்பா ஷெட்டி.
எனக்கு மலையாளத்தி்ல்தான் திருப்திகரமான படங்கள் கிடைக்கின்றன. எனவேதான் அங்கு நடித்துக் கொண்டிருக்கிறேன்.
தற்போது செயற்கை நகைகள் விற்பனைக் கூடத்தைத் தொடங்கவுள்ளேன். இதில் தீவிர கவனம் செலுத்தப் போகிறேன் என்கிறார் சோனா.
பி.ஏ. சைக்காலஜி படித்துள்ள சோனா இதுவரை யாருடைய காதலிலும் விழவில்லையாம். காரணம் என்ன என்று கேட்டால், எனக்கு சைக்காலஜி தெரியும். எனவேதான் ஆண்களிடம் படு கவனமாக இருக்கிறேன் என்கிறார்.


Click it and Unblock the Notifications











