தனி நாயகியாக நடிக்க வேண்டும் - சுஜாவின் தீராத ஆசை

ஐட்டம் பாடல்களின் அசைக்க முடியாத ராணியாக வலம் வரும் சுஜா, ஆரம்பத்தில் ஹீரோயினாகத்தான் அறிமுகமானார். பிளஸ்டூ படத்தில் நாயகியாக நடித்த அவருக்கு, அதன் பின்னர் வந்தது என்னவோ குத்துப் பாட்டுகள்தான்.
அவரும் கொஞ்சம் கூட யோசிக்காமல் வந்த குத்துப் பாட்டுக்களையெல்லாம் ஏற்றுக் கொண்டார். இதனால் பீல்டவுட் ஆகாமல் தொடர்ந்து திரையுலகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இப்போது இரட்டை நாயகியரில் ஒருவராக நடித்துக் கொண்டிருக்கிறார் சுஜா. எங்கள் ஆசான் படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக நடித்தார். தற்போது மிளகா படத்திலும் இரு நாயகியர்களில் ஒருவராக வருகிறாராம்.
இனிமேல் குத்துப் பாட்டுக்கு நான் ஆடப் போவதில்லை. இப்போது 2 நாயகியர்களில் ஒருவராக நடித்து வருகிறேன். விரைவில் மீண்டும் தனி நாயகியாக தனி ஆவர்த்தம் செய்யத்தான் போகிறேன் என்கிறார் நம்பிக்கையுடன்.
சமீபத்தில் வெளியான ஐந்தாம்படை படத்தில் ஆடிய குத்துப்பாட்டுதான் தனது கடைசி குத்துப்பாட்டாம். இனிமேல் ஐட்டம் ஆட்டம் ஆட மாட்டாராம் சுஜா.


Click it and Unblock the Notifications











