பரபரப்பு காத்திருப்பில் சுனேனா

காதலில் விழுந்தேன் மூலம் தமிழுக்கு வந்து சேர்ந்த சுனேனா தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான மாசிலாமணியும் ஹிட் ஆகி விடவே உற்சாகமாகி விட்டார் சுனேனா. அவரைச் சுற்றி நிறைய தயாரிப்பாளர் கூட்டம். இருந்தாலும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது யாதுமாகி படத்தில் நடித்து முடித்துள்ளார். இது கிராமத்து சப்ஜெக்ட். இதனால் கிராமத்துப் பெண்ணாக, பாவாடை, தாவணியில் கலக்கியிருக்கிறாராம். இப்படி ஒரு கேரக்டரில் இதுவரை நான் நடித்ததே இல்லை. படம் வெளியானால் நிறைய பேசப்படுவேன் என்கிறார்.
அதேபோல பேரரசு படத்தில் பரத்துடன் இணைந்து திருத்தணி படத்தில் நடிக்கப் போகிறார்.
இதுபோல வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய படங்களில் நடித்து வருவதால், அவை அனைத்தும் வெளியானால் தனக்கு பெரிய பிரேக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சுனேனா.
இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நான் எனக்கு நானே வட்டம் போட்டுக் கொள்ளவில்லை. சகலவிதமான கேரக்டர்களிலும் நடித்து வட வேண்டும் என்ற லட்சத்தியுடன் இருக்கிறேன் என்கிறார்.


Click it and Unblock the Notifications