'உருமி'யில் தபு!

நடிகர் ப்ருத்விராஜும் சந்தோஷ் சிவனும் இணைந்து ஆகஸ்ட் சினிமா எனும் பேனரில் தயாரிக்கும் படம் இது.
ப்ருத்விராஜ், பிரபு தேவா நாயகர்களாக நடிக்க, ஜெனிலியா நாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுகிறார் பாலிவுட் நடிகை வித்யா பாலன். இத்தனைக்கும் தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடிக்க வந்த வாய்ப்புகளைக் கூட மறுத்துவிட்டவர் வித்யா பாலன். ஆனால் சந்தோஷ் சிவன் படம் என்பதால் ஒற்றைப் பாடலுக்கு ஓகே சொன்னாராம். இந்தப் பாடலில் அவர் மோகினியாட்டம் ஆடப் போகிறாராம்.
இந்தப் படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தபு. அவர் நடிக்கும் காட்சிகள் மால்ஷெஜ் எனும் மலைப்பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டன.
தீபக் தேவ் இசையமைக்கும் உருமி, தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.
Comments


Click it and Unblock the Notifications