நயனதாராவுக்கு பதில் தமன்னா?

By Staff

Tamanna
லிங்குச்சாமி அடுத்து கார்த்தியை வைத்து பிரமாண்டமாக இயக்கவுள்ள புதிய படத்தில் புக் ஆகியுள்ள நயனதாராவுக்குப் பதில் தமன்னா நடிக்கப் போவதாக செய்தி அடிபடுகிறது.

பில்லா படத்தை முடித்த கையோடு நயனதாராவை தனது புதிய படத்திற்கு புக் செய்தார் லிங்குச்சாமி. அப்போது நயனதாராவுக்கு ரூ. 1.25 கோடி சம்பளமாக பேசி ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இப்படத்தை லிங்குச்சாமியே தயாரித்து,இயக்குகிறார். பருத்தி வீரன் கார்த்திதான் இப்படத்தின் நாயகன்.

ஆனால் பி்லலாவைத் தொடர்ந்து நயன் நடிப்பில் வெளியான சத்யம் மற்றும் குசேலன் தோல்வி அடைந்ததால், நயனதாராவுக்கு இவ்வளவு சம்பளம் ஜாஸ்தி என யோசித்தார் லிங்குச்சாமி.

எனவே அவரிடம் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்க அவரோ முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் சலசலப்பும் எழுந்தது.

இந்த நிலையில் நயன் நடித்த ஏகன் படத்திற்கும் பிரமாண்ட வரவேற்பு இன்னும் கிடைக்காததால், நயனதாராவை பேசாமல் தூக்கி விடலாம் என்ற யோசனைக்கு லிங்கு வந்துள்ளாராம்.

கோலிவுட்டில் புதுப் புயலாய் மாறி அலை பரப்பிக் கொண்டுள்ள தமன்னாவைப் பிடித்துப் போடவும் அவர் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.

மெய்யாலுமா என்று தமன்னாவிடம் இதுகுறித்துக் கேட்டால், உறுதிப்படுத்தவோ அல்லது இல்லை என்று கூறவோ அவர் மறுத்து விட்டார். இயக்குநர் தரப்பிலிருந்து தன்னை யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்று மட்டும் சொல்கிறார் தமன்னா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X