பணக் கஷ்டத்தால் விளம்பரங்களில் நடிக்கிறாரா நயனதாரா?

By Sudha

Nayantara
பிரபு தேவாவுக்காக நிறைய செலவழித்து வருவதால், கையில் பண இருப்பு குறைந்து போய் வருவதால்தான் நயனதாரா விளம்பரப் படங்களில் நடிக்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகை நயன்தாரா. இவரின் சம்பளம் ரூ.1 கோடிக்கும் அதிகம். உச்சத்தில் இருந்த அவர் காதல் நோயால் பாதிக்கப்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

பிரபுதேவா டைரக்டு செய்த வில்லு படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் 'கள்ளக் காதலாக' மாறியது. இருவரும் பகிரங்கமாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த விடாம்ல படு ஸ்டிராங்காக எதிர்த்து வருகிறார் கட்டிய மனைவி ரமலத்.

ஆனால் அன்மையில் இருவருக்கும் ரகசிய திருமணம் முடிந்து விட்டதாகவும், இருவரும் தனி குடித்தனம் நடத்துவதாகவும் வதந்திகள் வந்துள்ளன. இதெல்லாம் உண்மை என்று சொல்வது போல இருக்கிறது நயன்தாராவின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்.

முன்பு வந்த படங்களை எல்லாம் ஒப்பு கொண்ட அவர் கவர்ச்சிக்கும் குறைவின்றி நடித்தார். பில்லா படத்தில் பிகினியில் வந்து ஒரு கலக்கு கலக்கினார். தெலுங்கு படங்களிலும் படு கவர்ச்சியாக நடித்தார். ஆனால் இப்போது கவர்ச்சியாக நடிக்க மறுத்து வருகிறாராம். இது தான் அவர் போடும் முதல் நிபந்தனை.

அவர் ஆர்யா ஜோடியாக நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் பாடல் காட்சிகளில் கூட கவர்ச்சியாக வர முடியவே முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

கன்னடத்தில் ரூ.1 கோடி கொடுக்க தயாராக இருக்கிறோம் சிவராஜ்குமார் ஜோடியாக நடிக்க வாருங்கள் என்று அழைத்ததற்கும் 'நோ' சொல்லி விட்டாராம். இந்த படத்தை ஒதுக்கியதற்கு பின்னணியில் இருப்பது பிரபுதேவா தான் என்கின்றனர். இது மட்டுமின்றி புதுப்படங்களை ஒப்புக் கொள்வதையும் குறைத்து உள்ளார்.

இந்த நிலையில், தன்னிடமிருந்த ரொக்கத்தில் பெரும் தொகையை பிரபுதேவாவுக்கே செலவழித்து வருகிறாராம் நயன்தாரா. ஆனால் படங்களில் நடிக்காமல் பிரபுதேவாவுடன் சுற்றிக் கொண்டிருப்பதால் வருமானம் குறைந்து கையில் பணமும் இல்லாத நிலை. எனவே, தனது விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை விற்கப் போகிறார் என்று செய்திகள் வந்தது. பணக் கஷ்டத்தால் இது வரை நடிக்காமல் இருந்த விளம்பர படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X