தமிழுக்கு வருகிறார் பாலிவுட் நாயகி தனுஸ்ரீ தத்தா.

இப்போது பாலிவுட் நடிகை. தெலுங்கிலும் ஒரு படத்தில் தலை காட்டியுள்ள தனுஸ்ரீ தத்தா, தமிழுக்கு வரப் போகிறார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனாலும் தனுஸ்ரீ வருவதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் ஒரு வழியாக தமிழில் என்ட்ரி கொடுக்கிறார் தனுஸ்ரீ தத்தா.
விஷால் நாயகனாக நடிக்க, திரு இயக்க உருவாகும் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் தனுஸ்ரீ தத்தா.
ஆனால் படத்தில் இவர் மட்டும் ஹீரோயின் இல்லை. மேலும் 2 நாயகிகள் இருக்கின்றனராம். அவர்களில் ஒருவர் நீத்து சந்திரா. யாவரும் நலம் படத்தின் நாயகி இவர். இதுதவிர 3வது நாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.
இவர்களில் யாரை யார் வெல்லப் போகிறாரர்கள் என்று தெரியவில்லை.
Comments


Click it and Unblock the Notifications