இயக்குனர் மீது நடிகை உதயதாரா பரபரப்பு புகார்

By Staff

Udayatara with Tirumalai
தீ நகர் படத்தின் இயக்குனர் திருமலையுடன் தனக்கு ரகசிய திருமணம் ஆகிவிட்டதாக வந்துள்ள செய்திகளை நடிகை உதயதாரா மறுத்துள்ளார்.

கேரள மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்த உதயதாரா, தீ.நகர் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்து கண்ணும் கண்ணும் படத்திலும் நடித்தார்.

முதல் படமான தீ.நகர் படத்தில் நடித்தபோது அப்படத்தின் டைரக்டர் திருமலைக்கும் உதயதாராவுக்கும் காதல் ஏற்பட்டதாக கிசு கிசு பரவியது. டைரக்டருடன் மிகவும் நெருக்கம் காட்டியதாகக் கூறப்பட்டது.

இந் நிலையில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கோலிவுட்டில் கிசுகிசு கிளம்பியது.

ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் உதயதாரா. சென்னை தி.நகரில் ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கியுள்ள அவர் நம் நிருபரிடம் அவர் கூறுகையில்,

தீ.நகர் படத்தில் நடித்த போதே என்னை காதலிப்பதாக சொன்னார் திருமலை. அதை நான் ஏற்கவில்லை. இதையடுத்து விடாமல் அடிக்கடி என்னுடன் செல்போனில் பேசி தொல்லை தந்தார்.

பள்ளியில் படிக்கும் என்னை சின்னப்பெண் என்றும் பாராமல் தொடர்ந்து திருமணத்துக்கு சம்மதிக்குமாறு தொல்லை கொடுத்தார், கட்டாயப்படுத்தினார்.

நிறயை படங்களில் நடித்து பெயர் வாங்க வேண்டும் காதல், கல்யாணத்திலெல்லாம் இப்போது எனக்கு விருப்பமில்லை என்று அவரிடம் கூறிவிட்டேன். ஆனாலும் திரும்ப திரும்ப தொந்தரவு செய்தார். திருப்பதிக்கு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

நான் காதலை ஏற்காததால் இருவரும் காதலிப்பதாக அவரே கிசுகிசு பரப்பி விட்டார். திருமணம் ஆகிவிட்டதாகவும் அடுத்து புரளியைக் கிளப்பினார். இப்போது நான் கர்ப்பமாக உள்ளதாக ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இது கொடுமை. இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

எனக்கு 19 வயது தான் ஆகிறது. இப்போது தான் என் சினிமா வாழ்க்கையே தொடங்கியுள்ளது. நான் அவரை எனது சகோதரர் போலத்தான் நினைத்தேன். இப்போதும் கூட அவரை நான் நண்பராகவே கருதினேன். ஆனால், அதையெல்லாம் திருமலை கெடுத்துவிட்டார். நண்பராக இருக்கக் கூட அவருக்கு அருகதை இல்லை.

அவர் தொல்லை கொடுப்பது என் பெற்றோருக்கு தெரியும். இனிமேல் அமைதியாக இருக்க மாட்டேன். பெற்றோருடன் சென்று போலீசில் திருமலை மீது புகார் செய்வேன் என்றார் உதயதாரா.

ஆனால், இதையெல்லாம் திருமலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். உதயதாராவிடம் நட்பாக பழகியதாகவும், அவரை காதலிக்கவே இல்லை என்றும் கூறியுள்ள அவர் உதயதாரா குறித்து வெளியாகும் செய்திகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. தேவையானால் அவரை நேரில் சந்தித்து விளக்கம் தரவும் நான் தயார் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X