மராட்டிய எம்எல்ஏ - நடிகை நவநீத் கவுரின் மெகா திருமணம்!

By Chakra

அரசாங்கம் படத்தில் விஜய்காந்த் ஜோடியாக நடித்த நவநீத் கவுருக்கும் மராட்டிய மாநில சுயேச்சை எம்எல்ஏ ரவி ராணாவுக்கும் திருமணம் நடக்கிறது.

பஞ்சாபைச் சேர்ந்தவர் நவநீத் கவுர். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்தார்.

பிரபல சாமியார் பாபா ராம்தேவிடம் விதர்பா அருகே உள்ள அமராவதி ஆசிரமத்தில் யோகா கலை கற்று வந்தார் நவநீத் கவுர். அப்போது அங்கே யோகா கற்க வந்த சுயேச்சை எம்எல்ஏவான ரவி ராணாவுக்கும் நவநீத்துக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அதை வெறும் தனிப்பட்ட நிகழ்வாக செய்யாமல், பல ஏழை ஜோடிகளுடன் சேர்ந்து செய்து கொள்ள விரும்பினர்.

அமராவதி நகரில் உள்ள அறிவியல் மைய மைதானத்தில் வரும் பிப்ரவரி 2-ம் தேதி 2834 ஜோடிகளுக்கு பிரமாண்ட திருமணம் நடக்கிறது. உலக சாதனைப் புத்தகமான கின்னஸில் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. இந்த திருமணத்தில் ஒரு ஜோடியாக நின்று திருமணம் செய்து கொள்கிறார்கள் நவநீத் கவுரும் ராணாவும்.

புத்திசாலி ஜோடிகள்தான். சிக்கனமும் ஆச்சு... பிரபலத்துக்கும் குறைவில்லாமல் போச்சு...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X