'பார்ட்டி' தப்பா? திரிஷா விசனம்!

தென்னிந்திய கனவு தேவதை என ரசிக, ரசிகையரால் பட்டம் சூட்டப்பட்டுள்ள திரிஷா, தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஜோடி படத்தில் சிம்ரனுடன், வந்த தோழியர் கூட்டத்தில் ஒருவராக இடம் பெற்றிருந்த திரிஷா, இன்று தென்னிந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரினிகளில் ஒருவர்.
தற்போது கெளதம் மேனனின் சென்னையில் ஒரு மழைக்காலம், சர்வம், அபியும் நானும் என பிசியாக இருக்கிறார் திரிஷா.
சமீபத்தில் திரிஷா அளித்துள்ள ஒரு பேட்டியில், எனக்கு தமிழை விட தெலுங்குதான் சிறப்பாக அமைந்துள்ளது. அங்குதான் எனது திறமைக்கேற்ற, கேரக்டருக்கேற்ற படங்கள் கிடைத்துள்ளன.
ஆரம்பத்தில் நான் நடிப்பை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஜாலியாகத்தான் நடித்து வந்தன். இப்போதுதான் இதை ஒரு தொழிலாக கருதி, பக்தியுடன், மரியாதையுடன் அணுகுகிறேன்.
சிறந்த நடிகை என்ற பெயரை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. அதை மனதில் கொண்டே நடித்து வருகிறேன்.
சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தில் எனது கேரக்டர் சிறப்பாக இருக்கிறது. இது பேசப்படும். இந்த கேரக்டரை விரும்பி ஏற்று நடித்து வருகிறேன்.
என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வந்து விட்டன. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் பார்ட்டிக்குப் போனால் கூட பெரிதாக்கி விடுகிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. நான் ஒரு இளம் பெண். அறிவு முதிர்ச்சி இருக்கிறது. எது சரி, தவறு என்று எனக்குத் தெரியும். சுயமாக முடிவெடுக்கக் கூடிய வயதில் இருக்கிறேன்.
எனக்கு நண்பர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்களுடன் நான் எனது ஓய்வு நேரத்தை சந்தோஷமாக செலவிடுகிறேன். இதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது எனது பெர்சனல் விஷயம். இதில் யாரும் தலையிடுவதை நான் விரும்பவில்லை என்று கோபமாக கூறுகிறார் திரிஷா.
திரிஷாவுக்கு நடிகைகளிலும் சிலர் தோழிகளாக உள்ளனராம். அவர்களில் ஷ்ரியாவும், ரீமா சென்னும் நெருக்கமான தோழிகளாம்.
அப்ப நயனதாரா இல்லையா?


Click it and Unblock the Notifications











