twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூர்யா தான் என் உலகம்... ‘36 வயதினிலே’ பட விழாவில் ஜோதிகா!

    |

    சென்னை: சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் 36 வயதினிலே பட பாடல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

    திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ள படம் 36 வயதினிலே. இது மலையாளத்தில் வெற்றி நடை போட்ட ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தின் தமிழ் ரீமேக்.

    இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் மகன், மகளுடன் கலந்துகொண்டார்.

    மேலும் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, ரகுமான், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பாலா, பாண்டிராஜ், வெங்கட் பிரபு, ராதாமோகன், தரணி, தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, தனஞ்செயன், நடிகை அபிராமி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    இப்படத்தின் பாடல்களை சூர்யாவின் மகள் தியா வெளியிட, அவருடைய மகன் தேவ் பெற்றுக் கொண்டான். படத்தின் முன்னோட்ட காட்சிகளை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.

    இவ்விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது,

    ப்ரெண்ட்ஸ் எனும் சக்திகள்...

    ப்ரெண்ட்ஸ் எனும் சக்திகள்...

    வீட்டுக்கு வெளியே வந்து நான் இந்தப்படத்தில் நடிப்பதற்கு பெரிய பலமாக இருந்தது என் ப்ரெண்ட்ஸ் என்ற பெண் சக்திகள்தான். அனு, லட்சுமி, தேவி, பூர்ணிமா உள்ளிட்ட சில முக்கியமான தோழிகள் கொடுத்த ஊக்கம்தான் இந்தப்படத்தில் நடிக்க உதவியாக இருந்தது.

    கலர்புல்லான கேரியர்...

    கலர்புல்லான கேரியர்...

    அத்தை, மாமா இருவரையும் அம்மா, அப்பா என்றுதான் அழைப்பேன். இதுவரைக்கும் ஒரு நாள் கூட ‘இதுமாதிரி பண்ணாதே' என்று கூறியதே இல்லை. சினிமாவில் இயக்குநர் பிரியதர்ஷன் சார் அறிமுகப்படுத்தினாலும், வஸந்த் சார் வழிநடத்தல் கேரியரை கலர்ஃபுல்லாக்கியது.

    மனைவிகளின் ஒத்துழைப்பு...

    மனைவிகளின் ஒத்துழைப்பு...

    இந்தப் படத்தில் எல்லா டெக்னீஷியன்கள் உழைப்பும் ரொம்பவே ஸ்பெஷலாக இருந்தது. இசைக்கோர்ப்பின் போது சந்தோஷ் நாராயணன் மனைவி கூடவே இருந்து பார்த்தாங்க. படப்பிடிப்பின்போது கேமராமேன் திவாகரின் மனைவி உடன் இருந்தாங்க. நல்ல அலைவரிசை கொண்ட ஜோடி. படப்பிடிப்பு முழுக்க பரபரப்பாக ஒரு ஆண் மாதிரியே கேமராமேனுக்கு உதவியாக இருந்ததை எல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.

    ஆண் - பெண் பேதமில்லை....

    ஆண் - பெண் பேதமில்லை....

    என்னோட சின்ன வயதில், என் அம்மா தம்பியை எப்படி ட்ரீட் பண்ணுவாங்களோ, அதே மாதிரிதான் என்னையும் ட்ரீட் பண்ணுவாங்க. பையன், பொண்ணு என்று அம்மா பிரித்துப் பார்த்ததில்லை. அதெல்லாம் இப்போ வரைக்கும் எனக்கு பல இடங்களில் உதவியாக இருக்கிறது.

    அழகான அனுபவங்கள்...

    அழகான அனுபவங்கள்...

    ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லோருமே இப்படி ஒரு அழகான அனுபவத்தோடுதான் கழித்தோம். இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இப்படி ஒரு சிறந்த படத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி.

    டிரெண்ட் இல்லை...

    டிரெண்ட் இல்லை...

    தமிழில் தற்போது பெண்களை மையமாக வைத்து படம் உருவாகும் டிரெண்ட் இல்லை. மலையாளம், தெலுங்கு, இந்தியில் அந்த சூழல் உள்ளது. இங்கே இல்லாமல் இருப்பதற்கான காரணம் ஏனென்று தெரியவில்லை.

    கூட்டு உழைப்பு...

    கூட்டு உழைப்பு...

    இந்த சூழலில் பெண்ணை மையமாக வைத்து இப்படி ஒரு கதையின் பின்னணியில் மீண்டும் நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சி. இதற்கு பின்னணியாக இருப்பது கூட்டு உழைப்புதான்.

    என் உலகம்...

    என் உலகம்...

    இந்தப் படத்தோட தயாரிப்பாளர் சூர்யா. அவர்தான் என் உலகம். சென்னைக்கு புதிதாக வந்தபோது நான் சந்திந்த முதல் மனிதர். அப்போ இருந்து இப்போ வரைக்கும் எல்லா வகையிலும் ஒரு தூண் மாதிரி இருப்பது அவர்தான். கணவருக்கு நன்றி சொல்லக்கூடாது என்று சொல்வார்கள். அவரை கணவராக அடைந்ததை பெருமையான விஷயமாக கருதுகிறேன்'' என்றார்.

    English summary
    While it is not rare to see Suriya scale a stage as an actor, it was absolutely refreshing to see him take the grandstand as a producer in the audio launch function of 36 Vayadhinile. Making a public appearance along with their family for the first time, the star couple were overjoyed as they were showered with love and wishes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X