குருவாரூர் கோவில் யானையிடம் ஆசி பெற்ற அனன்யா!
மலையாளப் படப்பிடிப்பின்போது குருவாயூர் கோயில் யானையிடம் ஆசி பெற்றார் நடிகை அனன்யா.
நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. சீடன் படத்தில் நாயகியாக நடித்தார். படம் சரியாக ஓடாவிட்டாலும் அவரது கேரக்டர் பேசப்பட்டது. இப்போது 'இரவும் பகலும்' படத்திலும், பெயரிடப்படாத மேலும் இரு தமிழ் படங்களிலும் நடிக்கிறார்.
சீனியர்ஸ் என்ற மலையாள படத்திலும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு குருவாயூரில் சமீபத்தில் நடந்தது. அப்போது இயக்குனரிடம் அனுமதி பெற்று குருவாயூர் கோவிலுக்குச் சென்ற அனன்யா, அங்கு விளக்கேற்றி வழிபட்டார்.
பின்னர் கோவில் யானையிடம் ஆசி பெற்றார். யானையுடன் நின்று போட்டோவும் எடுத்துக் கொண்ட அனன்யா, பின்னர் இதுபற்றிக் கூறுகையில், "எனக்கு ரொம்பப் பிடித்தமான கோயில் இது. மனசுக்கு நிறைவாக இருந்தது. தமிழில் நிறையப் படங்கள் வந்தாலும் மனசுக்கு நிறைவான கதைகளைத்தான் தேர்ந்தெடுப்பேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











