அனுஷ்காவின் கவர்ச்சி.. ஹைதராபாத்தில் மொத்தம் 40 விபத்துக்கள்.. இயக்குநர் சொன்ன ஷாக் நியூஸ்

ஹைதராபாத்: அனுஷ்கா தெலுங்கு, தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். ஆனால் உடல் எடை கூடியதன் காரணமாக அவருக்கு வாய்ப்புகள் சட்டென குறைய ஆரம்பித்தன. கடைசியாக அவரது நடிபில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் வெளியானது. இப்போது காதி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனை வேதம் படத்தை இயக்கிய கிரிஷ் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகார்ஜுனா நடித்த சூப்பர் திரைப்படத்தில் நடித்து தன்னுடைய திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் அனுஷ்கா. அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. அனுஷ்காவின் அழகு, திறமை அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வாங்கிக்கொடுத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு வரிசையாக நடித்த அவர் தமிழில் ரெண்டு படத்தில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து கோலிவுட்டிலும் பிஸியான நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

இந்திய அளவில் ஃபேமஸ் அனுஷ்கா: கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் படு ஃபேமஸாக இருந்த அவரை ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் பிரபலமாக்கியது. அந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் ஹிட்டடித்தது. அந்தப் படம் ரிலீஸானதிலிருந்து அனுஷ்காவை ஸ்வீட்டி என்று அழைத்து வந்த ரசிகர்கள் தேவசேனா என்று அழைக்க தொடங்கினார்கள். செம ஃபார்மில் இருந்த அனுஷ்கா ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையையும் கூட்டினார். படமும் தோல்வியடைந்தது; அனுஷ்காவின் உடல் எடைய்ம் குறையவில்லை. இதனால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டன.

40 accidents took place in Hyderabad due to Anushka s poster
Photo Credit:

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி: சில வருடங்கள் நடிக்காமல் இருந்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் தொஅட்ங்கினார். படமானது கடந்த 2023ஆம் வருடம் வெளியானது. ஜவானோடு ரிலீஸானதால் படம் அடி வாங்கிவிடுமோ என்ற எண்ணம்தான் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் ஃபீல் குட் படமாக அந்தப் படம் அமைந்திருந்தது. இதன் காரணமாக செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பத்திலேயே அனுஷ்காவுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

காதி அனுஷ்கா: மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்து முடித்த அனுஷ்கா அடுத்ததாக காதி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் விக்ரம் பிரபுவும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். ஏற்கனவே அனுஷ்காவை வைத்து வேதம் படத்தை இயக்கிய கிரிஷ்தான் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். படமானது ஜூலை 11ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதுவும் தனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் அவர்.

வேதம் அனுஷ்கா: இதற்கிடையே கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா நடித்திருந்த வேதம் படமும் சூப்பர் ஹிட்தான். அந்தப் படத்தில் அனுஷ்கா விலைமாது கேரக்டரில் நடித்திருந்தார். அது அந்த சமயத்தில் பெரும் பேசுபொருளாக ஆனது. அதுமட்டுமின்றி படத்தில் அவர் உச்சபட்ச கிளாமரை காட்டியிருந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது. அப்படம்தான் தமிழில் வானம் என்று சிம்பு நடிப்பில் ரீமேக் ஆனது. இந்நிலையில் வேதம் ரிலீஸாகி 15 வருடங்கள் முடிவடைந்த நிலையில் கிரிஷ் கூறியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கிரிஷ் சொன்னது: அவர் படத்தின் நினைவுகளை அசைபோடுகையில், "வேதம் படத்தின் விளம்பரத்துக்காக அனுஷ்காவின் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை ஹைதராபாத்தில் இருக்கும் பஞ்சகுட்டாவில் வைத்தோம். அப்போது அந்த போஸ்டரை ஓட்டுநர்கள் ஆர்வத்தோடு பார்த்தார்கள். ஒருகட்டத்தில் அந்த போஸ்டரை பார்த்ததால் கிட்டத்தட்ட 40 விபத்துக்கள் ஏற்பட்டன. அது எங்களுகு விசித்திரமாக இருந்தது. அதனையடுத்து காவல் துறை கேட்டுக்கொண்டதால் அந்த போஸ்டரை அவ்விடத்திலிருந்து எடுத்துவிட்டோம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X