50 வயசு மனைவியின் பிறந்தநாள்.. 42 வயது தோர் நடிகர் வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா.. ஒரே ஜம்ப்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: தன்னை விட 8 வயது அதிகம் உள்ள நடிகை எல்ஸா படாகியை தோர் கடவுளாக அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்து அசத்திய கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். ஹாலிவுட்டில் ஒரே மனைவியுடம் இருக்கும் வெகு சில நடிகர்களில் இவரும் ஒருவர் என்று சொல்லும் அளவுக்கு 16 ஆண்டுகளாக தனது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
மனைவியின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த வயதிலும் மனைவி எந்தளவுக்கு ஃபிட்டாக இருக்கிறார் என்பதை காட்டுவதற்காக மலை உச்சியில் இருந்து நீரில் குதித்து சாகசம் செய்யும் வீடியோவை பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் அவரது மனைவி எல்ஸா படாகி இருவரும் அருவியில் குளித்து விளையாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகின்றனர்.
மனைவிக்கு 50 கணவருக்கு 42 வயது: பொதுவாக மனைவியை விட கணவன்மார்கள் தான் அதிக வயதுடையவர்களாக இருப்பார்கள். ஆனால், ஒரு சிலர் தன்னை விட மூத்த பெண்களையும் திருமணம் செய்துக் கொண்டு சாதித்துக் காட்டியுள்ளனர். அந்த வரிசையில் தன்னை விட 8 வயது மூத்த நடிகையான எல்ஸா படாகியை கடந்த 2010ம் ஆண்டு கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 1976ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி பிறந்து ஸ்பானிஷ் நடிகையாக பிரபலமான எல்ஸா படாகி இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
பாறையில் இருந்து நீரில் குதித்து சாகசம்: நீச்சல் குளங்களை தாண்டி ரியல் த்ரில்லை அனுபவிக்க விரும்பி பாறைகளில் நின்றுக் கொண்டு அருவியில் இருந்து கீழே விழுந்து தேங்கிய நீரோடையில் குதித்து கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் மனைவி குளிக்கும் வீடியோவை சற்றுமுன் வெளியிட்டு மனைவிக்கு 50வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தோர் நடிகர் சொல்லியுள்ளார்.
அருவியில் ஆனந்த குளியல்: மேலும், அருவியில் இருந்து வரும் நீரில் கணவனும் மனைவியும் நீச்சல் உடையை அணிந்துக் கொண்டு உல்லாசமாக குளித்து விளையாடும் வீடியோக்களையும் ஷேர் செய்துள்ளனர். கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துக்கு இப்படியொரு மனைவி கிடைத்த நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எல்ஸா படாகிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் மீண்டும் தோர் கடவுளாக சர்வதேச ரசிகர்களை குஷிப்படுத்த காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications