46 ஏஜ் தாஜ்மகால்.. ஹேப்பி பர்த்டே ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராயை போல பொண்ணு வேணும்னு பல வருடங்களாக இந்திய குடும்பங்களை ஏங்க வைத்த அழகின் பேரரசி ஐஸ்வர்யா ராயின் 46வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

மும்பை: ஐஸ்வர்யா ராயை போல பொண்ணு வேணும்னு பல வருடங்களாக இந்திய குடும்பங்களை ஏங்க வைத்த அழகின் பேரரசி ஐஸ்வர்யா ராயின் 46வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் இத்தாலி சென்றுள்ளார் ஐஸ்வர்யா ராய்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

46 ஏஜ் தாஜ்மகால்

46 ஏஜ் தாஜ்மகால்

கர்நாடகாவில் உள்ள மங்களூரில் 1973ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி பிறந்த ஐஸ்வர்யா ராய், இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். 1994ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டி நிகழ்ச்சியில் மகுடம் சூடிய ஐஸ்வர்யா ராய், 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் மகனும் நடிகருமான அக்‌ஷய் குமாரை திருமணம் செய்து கொண்டார்.

தமிழில்

தமிழில்

தமிழில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், ஷங்கர் மற்றும் மணிரத்னம் படங்களில் நடித்து வருகிறார். ஷங்கரின் ஜீன்ஸ் மற்றும் எந்திரன் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், மணிரத்னம் அடுத்ததாக இயக்கப்போகும் பொன்னியின் செல்வன் படத்தில் இரு வேடங்களில் நடிக்கவுள்ளார்.

வெற்றிப்படங்கள்

வெற்றிப்படங்கள்

ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளன. பாலிவுட்டில் வெளியான தூம் மற்றும் ஜோதா அக்பர் படம் ஐஸ்வர்யா ராய்க்கு மிகப்பெரிய இடத்தை பாலிவுட்டில் கொடுத்தது. தமிழில் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான அத்தனை படங்கள் சூப்பர்ஹிட் படங்கள் தான். கடந்த 2009ம் ஆண்டு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

கோலிவுட்டில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த காலகட்டத்தில் ஹாலிவுட்டில், தி லாஸ்ட் லீஜியன், பிங்க் பாந்தர் 2, மிஸ்ட்ரஸ் ஸ்பைசஸ், பிரைட் அண்ட் ப்ரீஜுடிஸ் போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மற்றும் இந்தியில் கலக்கியது போல ஹாலிவுட்டில் பெரிய அளவில் ஐஸ்வர்யா ராயால் ஹிட் கொடுக்க முடியவில்லை.

ஹேப்பி பர்த்டே ஐஸ்

ஹேப்பி பர்த்டே ஐஸ்

திரைத்துறையில் 22 ஆண்டுகள் முன்னணி நாயகியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் உருவாகவுள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனில், மீண்டும் இந்த அழகு பேரரசியை திரையில் காண காத்திருக்கிறோம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X