Simran: அடேங்கப்பா.. 47 வயதிலும் குறையாத எனர்ஜி.. பிதாமகன் ’தகதகவென ஆடவா’ பாட்டுக்கு ஆடிய சிம்ரன்!
சென்னை: மகான் 2 திரைப்படத்தின் அறிவிப்பு சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வரும் நிலையில் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சிம்ரன் நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 47 வயதைக் கடந்த நடிகை சிம்ரன் இன்னும் அதே எனர்ஜியுடன் எப்படி ஆடுகிறார் என்ன ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
பிரபுதேவா மற்றும் அப்பாஸ் நடிப்பில் வெளியான விஐபி படந்தான் நடிகை சிம்ரன் நடித்த முதல் படம். 1997-ஆம் ஆண்டு சிம்ரன் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரே வருடத்தில் விஐபி, விஜய் உடன் ஒன்ஸ்மோர். நேருக்கு நேர் மற்றும் பூச்சூடவா என வரிசையாக படங்களில் நடித்து தள்ளினார்.

சிம்ரன் கிரேஸ்: சிம்ரன் போட்டோவையே மூணு மணி நேரம் பார்ப்பேன் என மாயாவி படத்தில் ஜோதிகா இடமே நடிகர் சத்யன் சொல்லும் காமெடி வெறும் வசனத்துக்காக மட்டுமல்ல பல படங்களை ரசிகர்கள் சிம்ரனுக்காகவும் அவரது நடனத்துக்கும் பார்த்து ரசித்தனர். அவள் வருவாளா, கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பிரியமானவளே, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், ரமணா, வாரணம் ஆயிரம், பேட்ட மற்றும் மகான் என பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரிய வெற்றி படமாக அந்த படங்களை மாற்றியவர் நடிகை சிம்ரன். அஜித் மற்றும் விஜயுடன் இவர் ஜோடி போட்டு நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் அடித்தன. சிம்ரனின் இடத்தை நிரப்ப இன்னொரு நடிகை தமிழ் சினிமாவில் வரவே இல்லை என்பதுதான் உண்மை.
பிதாமகனில் குத்தாட்டம்: 2003-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் ஹீரோயின் சிம்ரன் ஆகவே வந்து நடித்திருப்பார். சிம்ரனும் சூர்யாவும் இணைந்து "தகதக.. தகதகவென ஆடவா" உள்ளிட்ட பழைய பாடல்களுக்கு குத்தாட்டம் போட்ட நடனத்தை இப்போது பார்த்தாலும் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.
47 வயதில் மீண்டும் ரீக்ரியேட்: சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த பாடலுக்கு தற்போது மரண குத்து குத்தி இருக்கும் புதிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக நடனம் தான் எனது மொழி என்றும் பதிவிட்டு இருக்கிறார். அந்த பாடலைப் பார்த்து ரசிகர்கள் அடேங்கப்பா அப்படியே ரீக்ரியேட் பண்ணிட்டீங்களே மேடம் என பாராட்டி வருகின்றனர். சீமராஜா, பேட்ட, மகான், கேப்டன் என பல படங்களில் இப்போதும் நடித்து வரும் சிம்ரன் அடுத்து மகான் 2விலும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











