மீனா குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா... விவிஐபிகளுக்கு அழைப்பு!

புத்தாண்டு தினத்தில் தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் மீனா. அதாவது குழந்தையின் பிறந்த தேதி 1.1.11 என வரவேண்டும் என்ற தணியாத ஆர்வத்தில் முன்கூட்டியே பெற்றெடுத்தார்.
இந்த மகிழ்ச்சியை மீனாவின் கணவர் வித்யாசாகர் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். அடுத்து, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை சைதாப்பேட்டையில் உள்ள மீனா வீட்டில் விமரிசையாக நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
வரும் சனிக்கிழமை இந்த விழா நடக்கிறது. விழாவுக்கு நடிகர் நடிகைகளையும் நெருங்கிய தோழிகளையும் மீனா அழைத்து வருகிறார்.
குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்கு கட்டாயம் வாங்க என்று வேண்டி விரும்பி மீனா அழைத்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை.
Comments


Click it and Unblock the Notifications