பாலிவுட் போனார் டாப்ஸீ!
டாப்ஸீ என்ற பெயர் ராசியோ என்னமோ... தமிழில் ஒரு படம் நடத்து, அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கும்போதே, பாலிவுட் வாய்ப்பு வந்துள்ளது அம்மணிக்கு.
ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை டாப்ஸீ. இப்போது தமிழில் வந்தான் வென்றான் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
வேறு எந்த தமிழ்ப்பட வாய்ப்பையும் மறுத்து வந்தார் அவர். இந்த நிலையில் அவருக்கு பாலிவுட்டில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிரபல இயக்குநர் டேவிட் தவானின் 'சாஸ்மே பதூர்' படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் டாப்ஸீ. நல்ல சம்பளம்... பெரிய பெயர், படம் ஜெயித்தால் இந்திய அளவில் நடிகையாக அங்கீகாரம் கிடைக்கும் என்பதால், உடனடியாக ஒப்புக் கொண்டாராம்.
விரைவில் வந்தான் வென்றானை முடித்ததும், மும்பையில் செட்டிலாகப் போகிறாராம் டாப்ஸீ.
Comments


Click it and Unblock the Notifications