ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் ஷம்முவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்!

ஓரின சேர்க்கை குற்றமல்ல. அது தனிப்பட்டவரின் சொந்த விஷயம். உச்ச நீதிமன்றமே சாதகமான தீர்ப்பு கூறியுள்ளது. உலக நாடுகளிலும் அங்கீகரித்து உள்ளன. இதில் நாம் யார் எதிர்க்க, என்று கூறி இருக்கிறார்.
இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. அதன் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஓரினச் சேர்க்கை சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டியது. இயற்கைக்கு மாறானது. குடும்ப வாழ்க்கையை சிதைக்க கூடியது. அதனை நடிகை ஷம்மு ஆதரித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
சில விஷயங்களை பகிரங்கமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். ஓரினசேர்க்கை முறை என்பதும் அப்படித்தான். இதனை ஷம்மு போன்றவர்கள் பேசுவதால் இளம் வயதினர் மத்தியில் தவறான எண்ணங்கள் உருவாகிவிடும்.
ஆணுக்கு ஆண் மீதும், பெண்ணுக்கு பெண் மீதும் ஈர்ப்பு ஏற்படுவதெல்லாம் வக்கிர எண்ணம். சிறுவர், சிறுமிகள் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே ஷம்மு வெளிப்படையாக இதனை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்...," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











