21 வயது இளம் தயாரிப்பாளரை ஜோடியாக்கிய 60 வயது சியான் விக்ரம்?.. இருமுகன் இயக்குநர் மிரட்டுவாரா?
சென்னை: சியான் விக்ரமின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. மேலும், இருமுகன் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் அடுத்து சியான் விக்ரம் நடிக்கப் போகும் படத்தின் அட்டகாசமான அறிவிப்பு ஒரு மினி டீசர் வடிவில் வெளியானது. இந்நிலையில், அந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கப் போவது 21 வயது தயாரிப்பாளர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சியான் விக்ரம் ஆரம்பத்தில் இருந்தே ரொம்பவே கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்து தனக்கான இடத்தை பிடித்து சேது படத்திற்கு பிறகு தொடர்ந்து டபுள் ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார். இயக்குநர் ஷங்கர் சியான் விக்ரமின் டெடிகேஷனை பார்த்து மிரண்டுப்போய் அவரை அந்நியன், ஐ உள்ளிட்ட படங்களில் நடிக்க வைத்தார்.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக மாறி கடந்த ஆண்டு தீபாவளிக்கு பைசன் படத்தின் மூலம் தனது முதல் வெற்றியை பெற்ற நிலையில், சியான் விக்ரம் மீண்டும் கம்பேக் கொடுக்க இருமுகன் பட இயக்குநர் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
60 வயது சியான் விக்ரம்: 1966ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பிறந்த சியான் விக்ரம் நேற்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால், 60 வயது ஆனது போல கொஞ்சம் கூட தெரியாத அளவுக்கு துருவ் விக்ரமுக்கு போட்டிப் போடும் அளவுக்கு செம யங்காக ஐ விக்ரம் ஸ்டைலில் ஐ பட பாடலை பாடிக்கொண்டு வெளியிட்ட வீடியோ வைரலானது. மேலும், ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கப்போகும் 63வது படத்தின் ஃபர்ஸ்ட் ஃபிளேம் எனும் க்ளிம்ஸ் வெளியானது.
சர்வம் மாயா நடிகை: விக்ரமை வைத்து வீர தீர சூரன் படத்தைத் தயாரித்தவர் தான் ரியா சிபு. தயாரிப்பாளர் சிபு தமின்ஸின் மகள் தான் ரியா. கடந்த ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான சர்வம் மாயா படத்தில் டெலுலு பேயாக நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். அந்த படம் நீண்ட வருடங்கள் கழித்து நிவின் பாலிக்கு 150 கோடி வசூல் படமாக மாறி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுத் தந்தது. இந்நிலையில், அதே சர்வம் மாயா நடிகை தான் விக்ரமின் 63வது படத்தில் அவருக்கு ஹீரோயின் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications