மீராவின் 2வது ஆட்டம்!

சமீபத்தில் நடந்த விவாகரத்து, புதிதாக கிடைத்துள்ள காதல், கை நிறைய மலையாளப் படம், மீண்டும் தமிழ் வரவு என புது மழையாக ஜில்லென்றிருக்கிறார் மீரா வாசுதேவன்.
உன்னைச் சரணடைந்தேன் மூலம் தமிழுக்கு நாயகியாக வந்த மீரா பின்னர் எடுபடாமல் போனார். ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷாலை காதலித்து மணந்தார். அது நிலைக்கவில்லை. சமீபத்தில் இருவரும் பிரிந்தனர்.
இப்போது புதிய காதலில் மூழ்கியுள்ள மீராவுக்கு மலையாளத்தில் நிறைய வாய்ப்புகளாம். கவர்ச்சியும், கேரக்டருமாக கலந்தடித்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார் புதிய உற்சாகத்துடன். அதே வேகத்தில் தமிழிலும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் ஆட்டநாயகன் மூலம்.
இப்படத்தில் 2வது நாயகியாக நடிக்கிறாராம் மீரா வாசுதேவன். தொடர்ந்து நிறையத் தமிழ்ப் படங்களில் நடிக்கப் போகிறாராம். இதுவரை இல்லாத அளவுக்கு புத்துணர்ச்சியுடன் இருப்பதாக சந்தோஷமாக கூறும் மீரா வாசுதேவன், கவர்ச்சிக்கும் தடை போடப் போவதில்லையாம்.
மலையாளத்தில் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் சரி, கவர்ச்சியாக நடிக்க வேண்டிய இடத்தில் தயங்காமல் நடிப்பார்கள். அங்குள்ள ரசிகர்களுக்கு ஹீரோயின்கள் சேலை கட்டியபடி மழையில் நனைந்தால் பார்க்கத் துடிப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் அப்படி நடித்துதான் ஆக வேண்டும். எனவே நானும் அதுபோல பல காட்சிகளில் நடித்துள்ளேன் என்கிறார் மீரா.
தமிழ் இளம் ஹீரோக்கள் அத்தனை பேரையும் மீராவுக்குப் பிடிக்குமாம். அவர்களுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.
ஆசை நிறைவேறட்டும்...


Click it and Unblock the Notifications











