»   »  திரிஷாவுக்கு வருண்மணியன் கொடுக்கப் போகும் நிச்சயதார்த்த பரிசு என்ன தெரியுமா?

திரிஷாவுக்கு வருண்மணியன் கொடுக்கப் போகும் நிச்சயதார்த்த பரிசு என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழிலதிபர் வருண்மணியனை திருமணம் செய்துகொள்ளப்போகும் திரிஷாவிற்கு நிச்சயதார்த்த தினத்தன்று விலை உயர்ந்த காரை பரிசாக கிடைக்கப் போகிறதாம். ரூ.7 கோடி மதிப்புள்ள மதிப்புள்ள காரை தனது வருங்கால மனைவிக்கு பரிசு தரப்போகிறாராம் வருண் மணியன்.

நடிகை திரிஷாவுக்கு, தொழிலபதிரும் திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதற்கான நிச்சயதார்த்தம் மறைமுகமாக நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால், இதற்கு திரிஷா மறுப்பு தெரிவித்தார். இருப்பினும், அவரும் வருண் மணியனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

திருமண நிச்சயதார்த்தம்

திருமண நிச்சயதார்த்தம்

இதற்கிடையில் திரிஷா, தனக்கும், தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண்மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டார்.

எளிமையான விழா

எளிமையான விழா

அதன்படி, வருகிற ஜனவரி 23ஆம் தேதி திரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் இருவீட்டார் முன்னிலையில் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது.

விலை உயர்ந்த பரிசு

விலை உயர்ந்த பரிசு

அதேசமயம் ரூ.7 கோடி மதிப்புள்ள ஜெட் பிளாக் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் என்ற காரை திரிஷாவுக்கு நிச்சயதார்த்த பரிசாக வருண்மணியன் வழங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமணம் எப்போ?

திருமணம் எப்போ?

நிச்சயதார்த்த தேதி முடிவாகிள்ள நிலையில், திருமணத்திற்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. நிச்சயதார்த்த விழாவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிப்பை தொடருவேன்

நடிப்பை தொடருவேன்

திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று சில நடிகைகள் கூறுவார்கள். பின்னர் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க வருவார்கள். ஆனால் தான் நடிப்புக்கு முழுக்கு போடுவதில்லை என்று திரிஷா ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Smiling sensation Trisha Krishnan is stated to be in the process of getting 7 Crores as gift from Varun. It is a fact that Varun is a successful businessman and he owns good property. It seems that he loves Trisha Krishnan so much and hence he decided to buy a gift matching his love.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil