ரஞ்சிதாவின் புதிய மலையாளப் படம்!

இந்தப் படம் நித்தியானந்தா சர்ச்சைக்கு முன்பே அவர் நடித்தது. 'புதுமுகங்கள்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மலையாள படம், நித்யானந்தா - ரஞ்சிதா சர்ச்சைகள் காரணமாக ரீலீஸ் ஆகாமல் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்தது.
டான் அலெக்ஸ், பிஜி ஆகியோர் இயக்கத்தில் தயாரிப்பாளர் சலாவுதீன் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு பிரகாஷ் பாயோலி கதை எழுதியிருக்கிறார்.
திரைக்கதை மற்றும் வசனங்களை பிரதீப் கவுந்தாரா எழுதியுள்ளார். ஷ்யாம் தர்மன் இசையமைத்துள்ளார். படத்தில் ரஞ்சிதா தவிர துஷார், சாரசி, அமீரா, சில்சிலா, ஹரிஸ்ரீ, அசோகன், லாலு அலெக்ஸ் மற்றும் கீதா நடித்திருக்கிறார்கள்.
நித்யானந்தா விவகாரத்துக்குப் பின் வரும் ரஞ்சிதாவுக்கு இது இரண்டாவது படம். இதற்கு முன் வந்தது ராவணன். அது வந்ததும் ஒன்றுதான் வராததும் ஒன்றுதான் என்ற அளவுக்கு துக்கடா வேடம் ரஞ்சிதாவுக்கு.
தனது சினிமா மறுபிரவேசத்துக்கு இந்தப் படம் உதவும் என்று நம்புகிறாராம் ரஞ்சிதா. இந்த ரசிகர்களை நம்பி அவர் எதையும் செய்யலாம்!


Click it and Unblock the Notifications











