40 வயசு ஆனாலும்..கொஞ்சமும் அந்த அழகு குறையல..சோனியா அகர்வாலின் க்யூட் லுக் !
சென்னை : நடிகை சோனியா அகர்வால் உடை குறைந்து வேறொரு லுக்கில் இருக்கும் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனியா அகர்வால். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.
நடிகர் தனுஷின் அண்ணனான இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்த சோனியா அகர்வால் பின்னர் அவரை விவாகரத்து செய்தார்.

நடிகை சோனியா அகர்வால்
பிரபல இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை சோனியா அகர்வால். இவரது நிதானமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதோடு முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதையும் தட்டி தூக்கினார்.

ஏராளமான படங்களில்
இதையடுத்து சோனியா அகர்வால் மீண்டும் செல்வராகவனின் ஹிட் படங்களான 7ஜி ரெயின்போ காலனி, புதுக்கோட்டை,மதுர போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து செல்வராகவனுடன் படங்களில் நடித்த சோனியாவுக்கும் செல்வராகவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

விவாகரத்து செய்தார்
திருமணமான பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து சோனியா அகர்வால் ஒதுங்கி இருந்தார். மிகவும் மகிழ்ச்சியாக சில ஆண்டுகள் வந்த இந்த தம்பதிகள் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். விவகாரத்துக்கு பிறகு சோனியா அகர்வால், சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில், அறிமுக இயக்குனர் ஷிஜின்லால் எஸ்எஸ் இயக்கத்தில் உருவான கிராண்மா திரைப்படத்தில் நடித்திருந்தார்.க்ரைம், த்ரில்லர் திரைப்படமான கிராண்மா திரைப்படத்தில் சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Fall வெப் தொடரில்
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ள Fall வெப் தொடர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடர் 8 எபிசோடுகள் கொண்ட த்ரில்லர் தொடராகும். இதில், அஞ்சலி, எஸ்.பி. சரண், சந்தோஷ் பிரதாப்,பூர்ணிமா பாக்கியராஜ், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளார். இதில் எஸ்.பி. சரணின் மனைவியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

கொஞ்சமும் குறையாத அழகு
7ஜி ரெயின்போ காலனி படத்தின் நடித்து அனைவரின் பேவரைட் நடிகையான சோனியா அகர்வால், அந்த அழகு கொஞ்சமும் குறையாமல் உடையை குறைத்து இன்னமும் அப்படியே இருக்கிறார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சோனியா அகர்வால், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் விதவிதமான போட்டோக்களை இணையத்தில் அப்லோடு செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











